- வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த கணவன் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.
- அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?"
- "இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"
- "தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"
- "இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."
*************************************************
- நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்
- என்ன சொல்றீங்க
- இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே
**************************************************
- எங்க வீடு கோயில் மாதிரி....
- அதுக்காக வீட்டு வாசல்ல உண்டியல் எல்லா வைக்கணுமா...?
*************************************************
- நேர்முகத்தேர்வில் : உங்கள் பெயர் என்ன ?
- ஆசாமி : கமல் !
- தேர்வாளர் : வீட்டில் எப்படி கூப்பிடுவாங்க ?
- ஆசாமி : கிட்ட இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க, தூரத்தில் இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க!
- தேர்வாளர் : ???!!!
**************************************************
- என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
- பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?
**************************************************
- நான் நீச்சல் கத்துக்கேறன்
- எங்கே...?
- தண்ணியிலதான்...!
**************************************************
- உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
- ஓட்டுவீடு, அபார்ட்மென்ட் இப்படித்தான் கிடைக்கும்...தங்க வீடெல்லாம் கிடையாது.
/* கிட்ட இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க, தூரத்தில் இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க!*/
ReplyDeletethis joke is nice.. carry on. super
நன்றி Dhosai
ReplyDelete