Saturday, February 25, 2017

பெண்கள் பிறந்த மாதமும் அவர்களின் குனமும்.


இங்கு பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது. அந்த வகையில் எந்தெந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள் என்பதை இங்கு காணலாம்.

#1 ஜனவரி

ஜனவரி மாதம் பிறந்த பெண்கள் பேரார்வம் உள்ளவர்களாகவும், இலட்சியங்கள் நிறைய கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

எந்த ஒரு விஷயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள்.

இவர்கள் தங்கள் உணர்வை அவ்வளவு சீக்கிரமாக வெளிப்படையாக கூற மாட்டார்கள். இவர்களை போன்றே இருக்கும் நபர்களுடன் தான் அதிகம் பழகுவார்கள்.

#2 பெப்ரவரி

பெப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் சற்று ரொமான்டிக்காக இருப்பார்கள். இவர்களிடம் பொறுமை காத்து பழக வேண்டும், அவசரம் காட்ட கூடாது.

அனைவராலும் இவர்களை புரிந்துக் கொள்ள முடியாது. இவர்களுடைய மூட் அடிக்கடி மாறும்.

#3 மார்ச்

மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் வலிமையான கவர்ச்சி இருக்கும். இவர்கள் எளிதாக அனைவரையும் ஈர்த்துவிடுவார்கள்.

மிக நேர்மையானவர்களாக, ஆளுமை செலுத்தும் நபர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் அவ்வளவு எளிதாக காதலில் விழுந்துவிட மாட்டார்கள்.

மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் பழக எளிமையானவர்கள்.

#4 ஏப்ரல்

ஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் இராஜ தந்திரர்கள். அனைவருடனும் மிக எளிதாக பழகி பேசிவிடுவார்கள்.

சிலர் பொறாமை குணமும் கொண்டிருப்பார்கள். இது அவ்வப்போது வெடிக்கும்.

தாங்கள் முழுமையாக நம்பும் நபர்களிடம் மட்டுமே தங்கள் மனதை திறந்து காட்டுவார்கள்.

#5 மே

மே மதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உறுதியான விடாப்பிடியான குணம் கொண்டவர்கள்.

இவர்கள் நேர்மையாக பழகுவார்கள். இவர்களுக்கென தனிக் கோட்பாடுகள் இருக்கும். ஈர்ப்பு மிக்க இவர்களுடன் எளிதாக பழகிவிட முடியாது.

காதலில் விழுவதும் கடினம். இவர்களை அவ்வளவு எளிதாக மறக்கவும் முடியாது.

#6 ஜூன்

ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஆர்வமிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் எளிதாக அனைவருடனும் பேசுவார்கள். \

கற்பனை திறன் அதிகமாக இருக்கும். நீங்கள் நினைக்கும் முன்னரே அதை பேசி முடித்துவிடுவார்கள் இவர்கள்.

ஒளிவுமறைவு இன்றி நடந்துக் கொள்வார்கள்.

#7 ஜூலை

ஜூலை மாதத்தில் பிறந்த பெண்கள் நேர்மை, அறிவு, அழகு, மர்மம் கலந்த கலவை. மோதல்கள் ஏற்படாமல் வாழ விரும்புவார்கள்.

அனைவரிடமும் கனிவாக நடந்துக் கொள்வார்கள். இவர்களை ஏமாற்றிவிட்டால், மறந்துவிட வேண்டியது தான் கதி.

மீண்டும் இணைய மாட்டார்கள்.

#8 ஆகஸ்ட்

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் தனித்துவமானவர்கள். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்.

நல்ல உள்ளம் கொண்டிருப்பார்கள். இவர்களுடன் மோத நினைக்க வேண்டாம்.

இவர்கள் உங்களை கண்டிப்பாக வென்றுவிடுவார்கள். இவர்களிடம் நகைச்சுவை உணர்வும் அதிகமாக இருக்கும்.

இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் அனைவராலும் ஈர்பார்.

#9 செப்டம்பர்

செப்டம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் அன்பு, கட்டுப்பாடு, அழகின் கலவை. யாரையும் அவ்வளவு எளிதாக மன்னித்துவிட மாட்டார்கள்.

இவர்களுடன் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது.

ஒருவருடன் பழகினால் அவருடன் நீண்ட நாள் உறவில் இணைந்திருக்க வேண்டும் என்றே எண்ணுவார்.

#10 அக்டோபர்

அக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் குணாதிசயங்கள் மிக வலுமையாக இருக்கும்.

உணர்ச்சிவசப்பட கூடிய பெண்களாக இருப்பார்கள்.

அனைவரிடமும் வெளிப்படையாக பேச மாட்டார்கள்.

தங்கள் மீது பொறாமை கொள்ளும் நபர்களையும் வெறுக்க மாட்டார்கள்.

#11 நவம்பர்

நவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட ஒருப்படி முன்னே இருக்க வேண்டும் என எண்ணுவார்கள்.

பொய்களை வேகமாக கண்டுபிடித்துவிடுவார்கள். உண்மையாக இருக்க விரும்பும் இவர்கள், உண்மை மட்டுமே கேட்க விரும்புவார்கள்.

#12 டிசம்பர்

டிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் பொறுமை பெரிதாக இருக்காது.

ஆனால் இவர்கள் லக்கியான நபர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக் கொண்டு வெற்றிக்கனியை பெற்றுவிடுவார்கள்.

திறந்த மனதுடன் பேசுவார்கள். இவர்களுக்கானவை இவர்களுக்கு கிடைக்காமல் போகாது.

Saturday, February 18, 2017

நீங்க பிறந்த நேரமும் உங்கள் குணாதிசயமும்.

ஜோதிடத்தில் பல வகை உண்டு. அதில் முக்கியமானது ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து அவர் குணாதிசயங்களை கணிப்பது.
அதன்படி பிறந்த நேரத்தை வைத்து அவர்களின் குணாதிசயங்கள் இதோ,

நடுஇரவு 12 – 2 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் தங்கள் குடும்பத்துக்கு எப்போதும் முன்னுரிமை அளிப்பார்கள். சமூக சூழல் விடயத்தை இவர்கள் நம்பிக்கையோடு கையாளுவார்கள்.

காலை 2 – 4 மணி
எல்லா விடயத்திலும் ஆர்வமாக இருக்கும் இவர்கள் புதிய கண்டுப்பிடிப்புக்காக மெனக்கெடுவார்கள். எழுதுவது, படிப்பது பிடித்த விடயமாக இருக்கும் இவர்கள் நட்புக்கு உண்மையாக இருப்பார்கள்.

காலை 4 – 6 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் வருங்கால வாழ்க்கை பற்றி அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். வளங்களை பாதுகாக்க விரும்பும் இவர்கள் மற்றவர்களை ஊக்கப்படுத்துவார்கள்.

காலை 6 – 8 மணி
இயற்க்கையிலேயே தலைவருக்கான பண்பு இந்த நேரத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கும். அவர்களிடமே அவர்கள் பலவிதமான கோரிக்கைகளை வைத்து கொள்வார்கள்.

காலை 8 – 10 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் தனிமை விரும்பியாக இருப்பார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய சுபாவம் கொண்ட இவர்கள் அதை தியானம் செய்வதன் மூலம் மாற்ற முடியும்.

காலை 10 – 12 மணி
புதிய நட்புகள், ஜாலியான விடயங்களுக்காக இவர்கள் மெனக்கெடுவார்கள். தங்களுக்கு பிடித்த விடயத்தை விரும்புகிறவர்களிடமே இவர்கள் நட்பு பாராட்டுவார்கள்.

மதியம் 12 – 2 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் லட்சியமும், பொறுப்பும் அதிகம் கொண்டிருப்பார்கள். இவர்கள் பணியில் சாதனை செய்தாலும் அது அவர்கள் குடும்ப வாழ்க்கையை பாதிக்கலாம்.

மாலை 4 – 6 மணி
நேர்மறை எண்ணங்கள் கொண்ட இவர்கள் தங்கள் மனதில் இருக்கும் முக்கிய விடயங்களை வெளிகாட்டி கொள்ள தயங்குவார்கள்.

மாலை 6 – 8 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் அடுத்தவர்களின் தேவையை புரிந்து கொள்வார்கள். வாழ்க்கை எப்படியோ அதை அதன்படியே வாழ்வார்கள்.

இரவு 10 – 12 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் தங்கள் தேவைகளை சரியாக புரிந்து வைத்திருப்பார்கள். நினைத்த லட்சியத்தை அடையும் திறமையும் இவர்களுக்கு இருக்கும்.