Thursday, December 22, 2016

உங்கள் குணங்களை சொல்லும் பிறந்தக்கிழமை!



திங்கள்கிழமை:
கொஞ்சம் அழுத்தமான ஆள்தான். எல்லாரும் நீங்க ரொம்ப கூலான ஆளுன்னு நினைப்பாங்க. ஆனால் உங்களுக்குள் அடிக்கிற புயலை கண்ணீர் என்ற மழையாக மாற்றாமல் மனசுக்குள் சமாதி கட்டுவது எப்படி என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். காலங்கள் போனாலும் சிலவற்றை எப்போதும் பசுமையாக மனசுக்குள் வைத்திருப்பீர்கள். எந்த விஷயத்திலும் உங்களுக்கான நேரம் வரும்வரை பொறுமையாக காத்திருப்பீர்கள். குறிப்பிட்ட நண்பர்களை மட்டுமே உங்களுடைய நெருக்கத்தில் வைத்திருப்பீர்கள். அதுவும் அவர்களால் உங்களுக்கு ஒரு பயனும் இருக்காது, உங்களால்தான் அவர்களுக்கு பயன். எளிமை உங்களுக்கு பிடிக்கும். அந்த எளிமையினால்தான் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பீர்கள். நம்பிக்கை துரோகம் உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. உங்களுடைய வாழ்க்கை மிகவும் அழகானது. ஏனெனில் அதை எப்படி அழகாக உருவாக்குவது என்பது உங்களுக்கு தெரியும்.

செவ்வாய்கிழமை:
எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். ஆனால் உங்களிடம் ஒரு வேலை வாங்குவதென்பது ரொம்ப கஷ்டம்தான். மற்றவர்களை கவனிப்பதில் உங்களுக்கு இஷ்டமில்லை, ஏனென்றால் உங்களையேதான் நீங்கள் அடிக்கடி பார்த்துக்கொண்டு இருப்பீர்கள். கடவுள் மேல் கொஞ்சம் குழப்பமான பக்தி இருக்கும். நெறைய சென்டிமெண்டல் ஆள் நீங்கள். அழுகை உங்களுக்கு பொங்கி வரும். உணர்ச்சிவசப்பட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்ன செய்வீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. உடன் இருப்பவர்களை குழப்பியே கொன்றுவிடுவீர்கள். எதையும் கிளிப்பிள்ளைக்கு சொல்றமாதிரி உங்களுக்கு சொல்லணும். ரொம்ப பாசமான ஆளு. ஆனால் அதனாலயே நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். அடிக்கடி தனிமை உலகத்திற்கு சென்றுவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான்.

புதன்கிழமை:
எதிலும் ஒரு நியாயம் இருக்கவேண்டும் என்று துடிப்பீர்கள். உங்களுடைய விஷயத்தில் உங்களால் நியாயமாக நடக்க முடியாத சமயத்தில் மிகவும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகுவீர்கள். அடுத்தவர்களுக்கு எது சரியானது என்று அழகாக தேர்ந்தெடுத்து கொடுப்பீர்கள். ஆனால் உங்களுக்கு தேர்ந்தெடுப்பதில் நிறைய தயக்கம் இருக்கும். அறிவுரைகளை உங்களிடம்தான் கேட்கவேண்டும், அறுத்தே கொன்றுவிடுவீர்கள். எதையும் சட்டென புரிந்து கொள்வீர்கள். நிறைய அனுபவங்கள் உங்களுக்கு இருக்கும். தாமரை நீரில் எப்படி ஒட்டாமல் ஆனால் நீருக்குள்ளயே இருக்குமோ அப்படி எந்த இடத்திலும் இருப்பீர்கள். நாகரீகமாக இருக்க வேண்டும், இடத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளவேண்டும் என்ற கொள்கை உள்ளவர். உங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தாலும் சமாளித்துக்கொள்வீர்கள்.

வியாழக்கிழமை:
ரொம்ப சக்திவாய்ந்த ஆள் நீங்கள். பெரிய பதவிகளை எளிதில் அடையக்கூடிய தகுதி உங்களிடம் இருக்கிறது. ரொம்ப அலட்டிக்காமல் பெரிய காரியங்களை எளிதாக முடித்துவிடுவீர்கள். தேவை இல்லாத விஷயங்களில் தலையிடமாட்டீர்கள். உங்களுடைய வழி தனி வழிதான். எல்லா வேலைகளையும் செய்யமாட்டீர்கள். நிறைய பிரெஸ்டிஜ் பார்க்கிறவர் நீங்கள். யாராவது பெரிய ஆட்களை பார்த்து எதாவது காரியத்தை முடிக்கவேண்டும் என்றால் உங்களிடம் சொன்னால் போதும். உங்களுடய நட்புவட்டாரம் கொஞ்சம் பெரிய இடமாகத்தான் இருக்கும். சாதாரண ஆட்களிடம் அவ்வளவாக பழக்கம் வைக்கமாட்டீர்கள். ஒன்றுமே இல்லாவிட்டாலும் சட்டையில் அழுக்குபடக்கூடாது என்று நினைப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கையை இப்படித்தான் அமைத்துக்கொள்ளவேண்டும் என்று அதிகம் அலட்டிகொள்ளமாட்டீர்கள்.

வெள்ளிக்கிழமை:
எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அதையும் மீறி சிரிக்கத் தெரிந்த ஆள் நீங்கள். உங்களுக்கு சின்ன பிரச்சனைகள் எல்லாம் வராது. எல்லாம் பெரிய பெரிய பிரச்சனைதான். ஆனால் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவீர்கள். என்ன செய்வது வாழ்க்கைனா அப்படித்தான் இருக்கும், இதெல்லாம் நேரம், கடவுள் செயல் என்று ஏற்றுக்கொண்டு போய்க்கொண்டே இருப்பீர்கள். யாரையும் எளிதில் நம்புவீர்கள். எல்லாரும் உங்களிடம் அவர்களுடைய பிரச்சனைகளை கொட்டி தீர்த்து விடுவார்கள். உங்களுடைய பிரச்னையும் மீறி அவர்களுக்கும் ஆறுதல் சொல்வீர்கள். உங்கள் முகத்தில் ஒரு குழந்தை தனம் இருக்கும், கொஞ்சம் தேஜசும் இருக்கும். எதிர்பாலினர் உங்களிடம் கொஞ்சம் தள்ளியே இருப்பார்கள். உங்களுக்கு தெரியாமலேயே உங்களை சுற்றி ஒரு பாதுகாப்பு வலையம் இயற்கையாகவே இருக்கும். உங்கள் வாழ்க்கை எப்பவும் கல்லெறிஞ்ச குளம் போல்தான் இருக்கும்.

சனிக்கிழமை:
மிகவும் தெளிவான ஆள் நீங்கள். நம்புனவங்களுக்கு சொர்க்கம் நீங்கள். எதிலும் சுறுசுறுப்பு. உங்களை நம்பி ஒரு கூட்டத்தையே ஒப்படைக்கலாம். தலைமை தாங்கும் பொறுப்பு எப்பொழுதும் உங்களை தேடி வரும். உங்கள் வாசலில் எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். உங்களுக்கு பிரைவசி கிடைக்காது. அடுத்தவங்க வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வீர்கள். அதிர்ஷ்டக்கல், எளிதில் பணக்காராவது எப்படி என்பது போன்ற சிந்தனைகள் உங்களுக்கு உண்டு. எவனும் தேவையில்லை, என்னை நான் பார்த்துகொள்வேன் என்று அடிக்கடி சொல்வீர்கள். அதுபோலவே நடுத்தெருவுக்கு வந்தாலும் மீண்டும் எளிதில் பழைய நிலைமைக்கு வரக்கூடிய திறமை உங்களிடம் இருக்கு. உங்களை நம்பி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கலாம். பண விஷயத்தில் ரொம்ப நாணயமாக நடந்துகொள்வீர்கள். உங்கள் வாழ்க்கை நிறைய மேடு பள்ளங்கள் நிறைந்தது.

ஞாயிற்றுக்கிழமை:
எதற்கும் கவலைப்படமாட்டீர்கள். எப்பவும் சந்தோசமான ஆள் நீங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்று அடிக்கடி சொல்வீர்கள். நல்ல திறமைசாலி. எந்த விஷயத்தைப்பற்றி கேட்டாலும் சொல்வீர்கள். உங்களிடம் ஒரு வசீகரம் இருக்கும். வேலை இருக்கும்போது ரொம்ப சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இல்லையெனில் நல்லா படுத்து தூங்குவீர்கள் அவ்ளோ சோம்பேறி. நல்லா ஊர் சுத்தணும், விருந்தில் கலந்துக்கணும், ஆட்டம், பாட்டம் பார்க்கணும் அது போதும் உங்களுக்கு. எவ்ளோ டென்ஷனான பதவியில் இருந்தாலும் நல்லா அனுபவிக்கத் தெரிந்தவர் நீங்கள். நல்லா படிக்கிற திறமை இருக்கும் உங்களிடம். எந்த கலையையும் எளிதில் கற்றுக்கொள்வீர்கள். யாரையும் தொந்தரவு கொடுக்கமாட்டீர்கள். ஜென்டில்மேன் என்று பெயர் வாங்குவீர்கள். உங்களுடன் இருப்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள். உங்களுடைய வாழ்க்கை போர்க்களமாக இருந்தாலும் புன்னகைதான் உங்கள் ப்ளஸ் பாயின்ட்.

Tuesday, October 4, 2016

பெண்கள் உறங்கும் நிலையை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்து கொள்ளுங்கள்!!





பெரும்பாலும், தம்பதிகள் உறங்கும் நிலையை வைத்து அவர்கள் இல்லற வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என கூற முடியும் என கேள்விப்பட்டிருப்போம்.

இதே போல பெண்கள் உறங்கும் நிலையை வைத்தே அவரது குணாதிசயங்கள், அவர் எப்படிப்பட்ட நபர், கோபக்கார நபரா, அமைதியானவரா என கண்டறிய முடியுமாம்.

நேராக படுப்பது, குப்புறப் படுப்பது, பக்கவாட்டில் படுப்பது, பொம்மை அல்லது உடன் இருப்பவர்களை கட்டியணைத்துக் கொண்டு படுப்பது என இந்த 4 முறையில் தான் பெரும்பாலும் அனைவரும் உறங்குவார்கள். இந்நிலைகளை வைத்து தனிப்பட்ட நபரின் குணாதிசயங்கள், பண்புகள் எப்படி இருக்கும் என இனிக் காண்போம்.

குப்புறப்படுப்பது(3)
குப்புறப் படுத்துக் கொண்டு தலையணைக்கு கீழ் கைகளை அணைத்து கொள்வது போல வைத்துக் கொண்டு உறங்கும் பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்களாக இருப்பார்களாம்.
இவர்கள் எதுவாக இருப்பினும் அதை வரவேற்கும் குணம் கொண்டிருப்பார்கள். மகிழ்ச்சி, இகழ்ச்சி, இன்பம், துன்பம் என உணர்வு ரீதியாக இவர்கள் அதிக தாக்கம் கொள்வார்கள்.

கட்டியனைத்துக் கொண்டு உறங்குவது
தலையணை, பொம்மை அல்லது பக்கத்தில் இருப்பவர்களை கட்டியணைத்துக் கொண்டு உறங்கும் பழக்கம் கொண்டுள்ள பெண்கள் நம்பகமானவர்களாக திகழ்வார்கள்.
எந்த விஷயமாக இருந்தாலும் இவர்கள் வெளிப்படையாக வெகுளியாக பேசிவிடுவார்கள். உள்ளொன்று வைத்துக் கொண்டு புறமொன்று பேசுவது போன்று இருக்க மாட்டார்கள். இவர்கள் நல்ல தோழியாக திகழ்வார்கள்.

நேராகப் படுப்பது(1)
நேராக படுத்து உறங்கும் பெண்கள் இயற்கையாகவே அமைதியானவர்களாகவும், கூச்ச சுபாவம் கொண்டுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
தங்களை தாங்களே உயர்வாக எண்ணிக்கொள்வது, தன்னம்பிக்கை இவர்களது விஷேசமான குணம் என கூறலாம். இவர்களிடம் பாஸ், மேனேஜர் போன்ற தலைமை வகிக்கும் குணம் அதிகமாக இருக்கும்.

பக்கவாட்டில் படுப்பது
அமைதியான குணாதிசயம், இரகசியத்தை வெளியே கசிய விடமாடார்கள். இவர்களை சற்று அதிகமாகவே நீங்கள் நம்பலாம்.
எவ்வளவு கடினமாக இருப்பினும், கோவப்படாமல், அவசரப்படாமல் அதற்கான தீர்வுகளை காண்பவர்களாக திகழ்வார்கள். உத்வேகமாகவும், மகிழ்ச்சியான நபர்களாகவும் இருப்பார்கள்.


Tuesday, September 27, 2016

பெண்களின் இருபத்திஏழு நட்சத்திரமும் அவர்களின் குணங்களும்.

1)அசுவினி – கவர்ச்சி மிக்கவர்,காருண்யம் கொண்டவர், கனிவு உடையவர், பரிசுத்தமும், பாசமும் நிரம்பியவர், காமவேட்கை மிக்கவர், கடவுள் பக்தி உடையவர்.

2. பரணி – பரிசுத்தம் அற்றவர், சண்டை, சச்சரவு, வஞ்சகம் மிக்கவர், திரைமறைவில் தீமை புரிபவர், கொடியவர், குரோதம் புரிபவர்.

3. கிருத்திகை – கொள்கை பிடிப்பற்றவர், அழகும் அங்கலட்சணமும், பண்பும் பரிசுத்தமும் கொண்டு பெரியோரை மதிப்பவர், அன்பும் ஆதரவும் கொண்டமக்களால் புரிப்படைவர், தாம்பத்திய ஐக்கியத்தை காப்பவர்.

4. ரோகினி – நேர்மை, உண்மை, கடும் உழைப்பு, அன்பு உடையவர், கணவரோடு அன்போடும் ஆதரவோடும் பழகுவார், இனிமையாக பேசுவர், தான தர்மம் செய்வார், மிகுந்த செல்வம் உடையவராக, திகழ்வார்.

5. மிருகசீரிசம் – சுத்தம், சுகாதரமானவர், அழகும், அங்கலட்சணமும், மதிப்பும், மரியாதையும், ஆடை, ஆபரண யோகமும் பெற்றவர், அருசுவைப்பிரியர் செல்வமுடையவர்.

6. திருவாதிரை – குரோதகுணமும், நயவஞ்சகமும், ஆத்திரமும், பகைவரை அழிக்கவல்ல வல்லமையும், குற்றம் புரிபவரும் தூய்மை அற்றவரும் ஆவார்.

7. புனர்பூசம் – பண்பும், பரிசுத்தமும், அடக்கமும், தரும சிந்தனையும், செல்வாக்கும், கருணை மற்றும் காருண்யம் மிக்கவர்.

8. பூசம் – சுகபோக சுவையாளர், வீடு, நிலம், வாகனம் வளம் படைத்தவர்.

9. ஆயில்யம் – அலுத்து ஆர்ப்பரிக்கும், சுகாதாரமற்ற, ஆபாச வார்த்தைகளை பிரயோகிக்கும், செய்யத்தகாத செயலை புரியும் விசுவாசம் அற்ற மாதர்.

10. மகம் – ராஜயோகம், சுகபோகமும், தீயவர் தொடர்புடைய, உயர் வர்க்கத்திற்கு மண்டியிடுபவர்.

11. பூரம் – சந்தோஷ, சல்லாபம் மிக்க, மக்கட்பேரால் பூரிப்படையும், செல்வமும்,செல்வாக்கும் படைத்த, நீதி நெறியுடன் வாழும் பண்பும் பரிசுத்தமும் காப்பவர்.

12. உத்திரம் – சரச சல்லாப பிரியர், மக்கப்பேறும், செல்வாக்கும் உடையவர், குடும்பத்தை பாதுகாப்பவர், உத்திரமாய் வாழ நினைப்பவர்.

13. அஸ்தம் – வனப்பும், வசீகரமும், அழகும், அங்கலட்சணமும் பொருந்திய, நுண்கலையில் வல்ல சுகபோகி.

14. சித்திரை – அணியும், ஆபரணமும், வனப்பும், வசீகரமும், அழகும் பொருந்திய சிறந்த மனிதர்.

15. சுவாதி – எதிர்ப்பை வெல்லுகிற, நல்லோர் இணக்கத்தால் நன்மை பெறும், பண்பும் பரிசுத்தமும் மிக்க சுகபோகி, மக்கப்பேரால் பூரிப்படைவர்.

16. விசாகம் – சாஸ்திர சம்பிரதாயங்களோடு குலதர்மத்தைக்காப்பவர், அறிவாற்றல், பெச்சுத்திரன்மிக்க அழகும் அங்கலட்சணமும் பெற்றவர், தீர்த்தயாத்திரை பிரியர், கடவுள் சேவை செய்பவர்.

17. அனுஷம் – கணவனுக்கு ஏற்ற பதிவிரதை, தியாக குணமும், வனப்பும், வசீகரமும், பண்பும் பரிசுத்தமும், பாராளும் பாக்கியமும் பெற்றவர், பொது நலசேவைவாதி, ஆடை, அணி, அலங்காரப்பொருள் மிக்கவர், மதக்கோட்பாடுகளை மதிப்பவர்.

18. கேட்டை – சத்திய நெறி காப்பவர், சகல சுக போகி, கணிவும், காருண்யமும், பண்பும் பாசமும் மிக்கவர், சுற்றம் விரும்பி.

19. மூலம் – கொடுமை நிறைந்தவர், வெறுப்பும் விகல்பமும் மிக்கவர், ஏழையால் ஏங்கி, நலிவு உறுபவர், உறவைப் பகைப்பவர்.

20. பூராடம் – அழகும், ஆற்றலும், அங்கலட்சணமும், பண்பும், பரிசுத்தமும் உடையவர், நற்செயல் புரிபவர், குடும்பத்தில் சிறந்தவர், நேசம் உடையவர்கள், தானம் செய்பவர்கள், சுக துக்கம் எதுவானாலும் மனமுவந்து அனுபவிப்பவர்கள்.

21. உத்திராடம் – பெறும், புகழும் பெருவாழ்வும், கனிவும், காருண்யமும் மிக்கவர், சந்தோஷ சல்லாபி, கணவனுக்கு ஏற்ற பதிவிரதை.

22. திருவோணம் – அழகு , அங்கலட்சணம், வனப்பு, வசீகரம் பொருந்திய, தயாளகுணம், தார்மீக சிந்தனை, நம்பிக்கையும் நாணயமும், தியாகமும் மிக்கவர்.

23. அவிட்டம் – வீடு, நில வாகன லாபம், பெருந்தன்மை படைத்தவர், ஆடை, அணி, ஆபரண, அறுசுவை பாக்கியம் பெற்றவர்.

24. சதயம் – நியாமமும், நீதியும், நேர்மையும், நேசமும் மிக்கவர், காமகுரோதங்களை அடக்குபவர், மூத்தோரை மதிப்பவர்.

25. பூரட்டாதி – சமுதாய உயர் அந்தஸ்து உடைய பொன் பொருள் போகம் மிக்க, தார்மீக சிந்தனையும், தரும குணமும் படைத்தவர், அறிவு ஆற்றல் மிக்க அருளாளர்.

26. உத்திரட்டாதி – மாண்புமிக்க, பாசமுடைய பதிவிரதை, குலதர்மம் காக்கும் அறிவு ஆற்றல் படைத்த சந்தோஷ சல்லாபி.

27. ரேவதி – சாஸ்திர, சமூகம், சம்பிரதாயம் மதிப்பவர், உயர் லட்சியம் உடைய நேசபாசம் காப்பவர், அழகு, அங்க லட்சணம், வனப்பு, வசீகரம் பொருந்தியவர், எதிரியை வெல்பவர், வாகன வளம் உடையவர்.