Tuesday, October 26, 2010

Tamil Unicode Font To Bamini Font (Unicode To Bamini)



நாம் இனையத்தில் தமிழில் படிக்கும் ஏதாவது பிடித்திருந்தால் அதை நாம் Save செய்து வைக்க நினைக்கலாம் ஆணால் நமது கணனியில் Tamil Unicode மென் பொருள் இல்லாவிட்டால் அது பெட்டி பெட்டியாக வரும் அதையே நாம் சாதாரணமாக பயன்படுத்தும் Bamini Fontல் Save செய்து வைத்தால்.
அதற்கான வழி இனையத்தளத்தில் Tamil Unicode Fontல் உள்ள உங்களுக்கு தெவையான விடயத்தை Copy செய்து கீழ் தரப்பட்டுள்ள இனையத்தில் மேலுள்ள பெட்டியில் Paste செய்து அதற்குள் Clek செயதால் போதும் கீழ் உள்ள பெட்டியில் Bamini Fontல் கிடைக்கும் அதை நீங்கள் Copy செய்து தேவையான இடத்தில் பயன்படுத்தலாம்.

சுட்டி

இதேபோல்  சாருகேசி, சிங்காரி, சிங்காரம், ரோஜா, பாமினிBamini Fontல் உள்ளதை Tamil Unicode Fontஆக மாற்ற

சுட்டி

Monday, October 18, 2010

நீங்க நல்லவங்களா கேட்டவங்களா?

ராகம், துவேசம், காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இரட்சியம், அசுயை, டம்பம், தர்ப்பம், ஆங்காரம் என்[Iனும் பதின் மூன்று தோஷங்களாலும் மனத்தின் தன்மை கெடுகிறது. இவை மனத்தைப் பற்றி நின்று, மனிதனையும் மனித மனத்தையும் அலைக்கழிக்கின்றன. இவற்றால் பற்றப்படாத மனம் தூய்மையும் சக்தியும் படைத்ததாக விளங்குகின்றது. அங்கே தெய்வமே குடியிருப்பது போன்ற சிறந்த நிலையும் உருவாகின்றது.

01:- ராகம்

 இன்னெருவனுக்கு மனைவியாகிவிட்ட ஒரு பெண்ணை இச்சித்து, அவளையே எப்படியும் அடையவேண்டும் என்று எண்ணும் மனத்தின் துண்டுதலுக்குத்தான் "ராகம்" என்று பெயர். இந்த எண்ணத்தால் வரும்கேடுகள், பகைமைகள் மிகப் பலவாகும் இதற்கு உதாரணமாக, இராவணன் சீதையை விரும்பின செயல் சொல்லப்படுகிறது. அவனுடைய தவமும், புகழும், செல்வமும், வீரதீர பராக்கிரமங்களும், படைபலமும் எல்லாமே முற்றவும் அழியக் காரணமானது, அவன் இராமன் மனைவியை கவர்ந்துபோன அந்த மனத்தளர்ச்சியின் விளைவுதான் "ராகம்" இப்படித் தூண்டிக்கெடுக்கும் ஒரு மனத்தூண்டுதல் ஆகும் இதை எழும்போதே அடியோடு முழுவதும் நசுக்கிவிட வேண்டும்.

02:- துவேஷம்

நமக்கு ஒருவர் கெடுதல் ஒன்ரைச் செய்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவர்மீது சதா சர்வகாலமூம் விரோதத்தையே எண்ணுகின்றோம் அல்லவா! பதிலுக்கு பதில் எப்படியும் கெடுதல் செய்யவேண்டும் என்ன வெறி கொள்ளுகின்றோம் அல்லவா! இவ்வாறு மனதிலே ஏற்படுகின்ற பகைமைத் தூண்டுதலே "தூவேஷம்" ஆகும். இதற்குச் சிறந்த உதாரண புருஷனாகத் திகழ்ந்தவன் இரணியன். இவன் எந்தத் தவறும் செய்தவன் அல்ல ஆனாலும், ஹரியின்மீதுள்ள துவேஷ மனப்போக்கே இவன் உயிருக்கு இறுதியாக முடிந்து விட்டது.

03:- காமம்

 வீடு, வாசல், நிலலன்கள், தனதானியங்கள் ஆகியவற்றை மேலும் மேலும் அளவில்லாமல் சம்பாதித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்னும் கரைகடந்த பொருள் ஆசைக்குக் "காமம்" என்று பெயர். உழைப்பினலே கிடைத்த தைக்கொண்டு திருப்தி அடையாமல், மேலும் மேலும் தேடித் தேடிக் குவிக்கவிரும்பிம், தானும் அநுபவியாமல் பிறரையும் அநுபவிக்கவிடாமல் சேர்த்துவைக்கத் துடிக்கும் பேராசையாலே அவஸ்த்தைப் படுகிறவர்கள் உலகிலே கணக்கற்றவர்கள். நரகாசுரனின் கதை இந்தப் போராசையால் ஏற்படும் அழிவுக்கு ஒரு பழைய உதாரணமாகும்.

04:- குரோதம்

நம் பொருளை எவராவது அழித்தால், அவர்கள் மீது நமக்கு ஏற்படும் சினமாகின்ற உணர்ச்சிக்கே "குரோதம்" என்று பெயர். இந்தக் குரோதத்தால் அழிவை அடைந்தவன் பகாசுரன் என்று புராணங்கள் கூறுகின்றன. பல சாதிச் சண்டைகட்கும் இந்த அர்த்தமற்ற மனக்குரோதமே தூண்டுதலாக விலங்குகின்றது.

05:- உலோபம்

தனக்குரிமையான பொருளில் எந்தவொன்றையும் பிறர் ஒருவருக்குக் கொடுக்க விரும்பாத மனத்தின் தன்மைக்கு "உலோபம்" என்று பெயர். இந்த உலோப குணத்திற்குச் சிறந்த உதாரண புருஷன் துரியோதனன். பஞ்ச பாண்டவர்களுக்கு அவன் மனநிறைவோடு ஐந்து ஊர்களாவது தந்திருந்தால், பாரதப் போரே நிகழ்ந்திருக்காது. அதற்குங்கூட மனமில்லாத துரியோதனனின் உலோப குணத்தால் அவனும் மாண்டான்: மற்றும் எண்ணிறந்தவரின் மரணத்துக்கும் காரணமானான்.

06:- மோகம்

தனக்குரிய பொருள்களின்மீது அளவுகடந்த ஆபாசத்தோடு (மோகத்தோடு) சிலர் இருப்பார்கள். பிள்ளைகள் பேரிலோ, அல்லது தாம் பயன்படுத்தும் பொருள்கள் மீதிலோ, தமக்குரித்தான பொருள்கள் மீதோ இந்த ஆசாபாசங்கள் செல்லும். அவற்றிற்கு ஒரு கெடுதி என்றால், அவர்களுக்குத் தாங்கமுடியாத துயரம் உண்டாகும். இந்த மன அவஸ்தைக்கு இரையானவன் தசரதன். இராமன் மீது இவனுக்கிருந்த அளவுகடந்த மோகந்தான் அவன் காட்டுக்குப் போனதும், இவன் சாவுக்குக் காரணமாயிற்று. இதைப் "பாசம்" என்றும் சொல்லலாம். இது ஒரு மன அவஸத்தையே இது காரணகாரிய வாதத்திற்குள் நிற்பதும் இல்லை.

07:- மதம்

செல்வர்கட்கும், பெரும்பதவியில் இருப்பவர்கட்கும், சிறந்த வித்தை அறிந்தவர்கட்கும், "கர்வம்" என்பது மனத்திலே வரவே கூடாது. இப்படி உண்டாகும் கர்வத்தின் காரணமாக, எதைச் செய்கிறோம் என்பது கூடத் தெரியாமல், பிறரை வெறுத்தும் பழித்தும் நடந்துவார்கள். இந்த மனநிலைதான் "மதம்" என்று சொல்லப்படும். இதற்குக் கார்த்தவீரியார்ச்சுனன் ஒரு நல்ல பழைய உதாரணமாவான். இவனுடைய செருக்கே இவனுக்கு இறுதியாக முடிவைத் தேடித் தந்தது.

08:- மாற்சரியம்

தன்னிலும் மிகுதியாக ஏதேனும் ஒருவகையில் ஒருவர் மேன்மை பெற்றிருந்தால், அதைக் கண்டு பொறாமல், அவரை எப்படியும் ஒழிக்கவேண்டும் என்று துடிக்கும் மனோ விகாரத்துக்குத்தான், "மாற்சரியம்" என்று பெயர். சிசுபாலன், தந்தவக்கிரன் ஆகியோர் இந்தவித பாற்சரிய எண்ணத்தால் முடிவிலே சாவை அடைந்தவர்கள். இதையே "பொறாமை" என்றும் கூறுவார்கள். பிறர் நலங்கண்டு பொறாத கெட்டமனப்போக்கு இது.

09:- இரட்சியம்

நமக்கு ஒரு துன்பம் வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். இதே துன்பமானது பிறருக்கும் வரவில்லையே, நமக்கு மட்டுமே வந்திருக்கின்றதே என்று நினைத்து வேதனைப்படுவதும், முடிந்தால் பிறரையும் அந்தத் துன்பத்தில் வீழ்த்திவிட முற்படுவதுமான ஒருவகை மனோவிகாரமே "இரட்சியம்" எனப்படும் இதற்கு உதாரணமாக அருணாட்சன் என்பவனைக் கூறுவார்கள். இந்த காலத்தில் பலரைக் கூறலாம். ஏதாவது ஒன்றில் மாட்டிக் கொண்டால், தம்மைப் போலவே பிறரும் மாட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து, அவரையும் காட்டிக்கொடுத்து, அவர்களும், அவஸ்தைப் படுவதைப் பார்த்துத் திருப்தியடைகிறவர்கள் அநேகம் பேர். இந்த மனோவிகாரமே இரட்சியம் என்று கூறப்படுகிற மனத்தின் கேடாகும்.

10:- அசூயை

நாம் ஒரு சுகத்தை அநுபவிக்கின்றோம். அந்தச் சுகத்தை நாம் மட்டுமேதான் அநுபவிக்கவேண்டும்: வேறு எவரும் அதை அநுபவிக்கவே கூடாது என்று நினைக்கும் மனேபாவந்தான் "அசூயை" என்று சொல்லப்படுகின்றது. இதற்கு உதாரண புருஷன் பவுண்டரிக வாசுதேவன் என்பவன் ஆவான். இந்த மனேபாவம் பலரிடம் இருப்பது. தன் ஆசனத்தில் பிறர் அமர்ந்தாலோ, தன் ஆடையைப் பிறர் உடுத்தாலோ, பக்கத்தில் தகுதி குறைந்தவர் வந்து நின்றாலோ, முகத்தைச் சுளிக்கும் வினோதமான குணம் இந்த மனப்போக்கால் வருவதுதான்

11:- டம்பம்

தான் செய்யும் செயல்களையோ, தன்னையோ பலரும் பார்த்து பேஷ் என்று மெச்சிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்ற புகழ் விரும்பும் மனேபாவத்திற்கு "டம்பம்" என்று பெயர். ஆடை அணிகள் அலங்காரங்கள் எல்லாம் இந்த மனோவிகாரத்துள் அடங்கும். இதற்கு உதாரணமாகக் கூறப்படுபவன் அம்பரீசன் என்னும் மன்னன். இடம்பத்தால் அழிந்தவன் இவன். இந்த இடம்பம் இன்று நாகரிகம் என்ற புதுப்பெயரோடு ஜாம் ஜாமென்று நாட்டிலே பவனி வந்து கொண்டிருக்கிறது. தனக்கு நன்மையா என்று பார்ப்பதைவிட, அடுத்தவர் பாராட்ட வேண்டும் என்று வாழ்கின்ற மனோசலனம் இந்த நிலையாகும்.

12:- தர்ப்பம்

தானே பெரிய வீரன் எனவும், தனக்கு எவருமே நிகரில்லை எனவும், மனத்திலே தோன்றி வலுப்பெற்று வளர்கின்ற ஒரு தன்மையைத் "தர்ப்பம்" என்பார்கள். மகாவீரனாக இருந்த சதகண்ட ராவணன் என்பவன் இந்த மனக்போளாறினாலேதான் முடிவில் அழிவடைந்தான். இவனைப் போலவே அழிந்தவர்கள் வரலாற்றில் பலர். வெற்றிமேல் வெற்றியாக அடைந்து வந்த ஹிட்லரையும் இந்த மனச்செருக்குப் பற்றிக் கொண்டது. பிரான்சு நாட்டையே ஒரு வாரத்திலே பிடித்தோம், ரஷ்யா நமக்கு எம்மாத்திரம் என்றுதான் முதலில் நினைத்தான். இதன் முடிவாக ஹிட்லரே அழிவை அடைந்தான். இதை "ஆணவம்" என்றும் கூறலாம்.

13:- ஆங்காரம்

நானே எல்லாம்; நான் சர்வ சக்தி வாய்ந்தவன்; எனக்கு எவரும் நிகரில்லை; எல்லாம் எனக்கு உட்பட்டவை; எல்லோரும் எனக்குத் தாழ்ந்தவர் என்று ஏற்படுகின்ற மனக்கோளாறு மிகமிகப் பொல்லாதது. இதனை "ஆங்காரம்" என்பார்கள். இதற்கு உதாரணமாகியவர் மதுகைடவர்கள். இந்த மனக் கோளாறுதான் இவர்களை முடிவிலே அழித்துவிட்டது.

ஆக, மனத்திலே எழுகின்ற ஒவ்வொரு வகையான மனேபாவங்கள் அவர்கள் பிற வகையில் எவ்வளவு சிறந்த சக்தியும் தகுதியும் வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை அழித்து விடுகிறது என்பதை நாம் அறிய வேண்டும்.