Tuesday, September 7, 2010

கொஞ்சம் பழைய ஜோக் 3

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!

**************************************


அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் ?

ஏன் ?

அது ஜhம் ஜhம்னு நடக்கற கல்யாணம்

**************************************
எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும்

வாங்கியிருக்கீங்களே .. . ஏன் ?

இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும்.

ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான

**************************************

என்ன டாக்டர் ஆபரேஷனுக்கு ஃபீஸ் வாங்கமாட்டீங்களா .. ?

ஆமாம். செய்கூலி இல்லை, ஆனா, சேதாரம் உண்ட



**************************************

காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன் ?
ஏன் ?
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்ச



**************************************

ஜோன்ஸ் : தாம்பரம் ரெண்டு டிக்கெட் கொடுங்க.
கண்டக்டர் : இன்னொரு டிக்கெட் யாருக்கு?
ஜோன்ஸ் : ரெண்டுமே எனக்குத்தான். ஒன்னு தொலைஞ்சி போனா இன்னொன்னு உதவுமே.
கண்டக்டர் : அதுவும் தொலைஞ்சி போச்சுனா?
ஜோன்ஸ் : ஒன்னும் பிரச்சினை இல்ல. என்னோட பஸ் பாஸ் பத்திரமா இருக்கு.




**************************************

நர்ஸ் - ஆபரேஷன் தியேட்டர்ல வந்து கூட எதுக்கு டாக்டர் என்னை சில்மிஷம் பண்றீங்க

டாக்டர் - புரியாமல் பேசாதே. .. பேஷண்ட்டுக்கு மயக்க மருந்து வேலை செய்யிதான்னு உன் மூலமா டெஸ்ட் பண்ணினேன், அவ்வளவுதான்

**************************************
உனது கடைசி ஆசை என்ன ?

சரியாக வாதாடாமல், எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்ததற்குக் காரணமான எனது வக்கீலையும் என்னுடன் தூக்கில் போடவேண்டும்


**************************************
ஆபரேஷன் செய்வதற்கு முப்பதாயிரம் ரூபாய் பீஸ் சரி டாக்டர், அதென்ன ப்ளஸ் முந்நூறு

அது, பாடியை வீட்டுக்கு எடுத்து போக ஆம்புலன்ஸ் வாடகை



**************************************

உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?

கண்டிப்பா இருக்கே.

அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?

அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே


**************************************

என்னப்பா * காபியில ஈ செத்துக்கிடக்குது.. .?

ஸ்பெஷல் காபியிலதான் சார் ஈ உயிரோட இருக்கும

**************************************

பார்பர் : “சார், கொஞ்சம் முகத்தை திருப்ப முடியுமா?”

நபர் : “அதுக்குள்ளே இந்த பக்கம் முடிஞ்சுதா?”

பார்பர் : “இல்லை சார். எனக்கு இரத்தம்னா அலர்ஜி.”

**************************************

டிராபிக் போலிஸ் : “ரெட் சிக்னல் போட்டிருக்கே.. ஏன் நிக்காம போயிட்டு இருக்கே?”

நபர் : “எனக்கு கண் தெரிஞ்சா நான் பார்த்திருக்க மாட்டேனா சார். ஆமா.. இதெல்லாம் கேக்கிறீங்களே நீங்க யாரு?”

No comments:

Post a Comment