ஒருவன்: டேய்! ஏன்டா பேணை ஆப் பண்ணிட்ட?
மற்றொருவன்:எங்கப்பாதான் சொல்லி இருக்காரு,
வியர்வை சிந்தி சாப்பிடனும்ன்னு!
********************************************
என் அப்பா, அண்ணனை நெனச்சாதான் பயமா
இருக்கு டார்லிங் !'
'ஏன்... நம்மைப் பிரிக்க முயற்சி பண்றாங்களா ?'
'இல்லை.... சேர்க்க முயற்சி பண்றாங்க !'
**********************************************
நீ யாரோ ரெண்டு பேரோட ஊர் சுத்திட்டு
இருக்கியாமே ?'
'யாரோ உங்ககிட்டே ஒண்ணுக்கு ரெண்டா சொல்லியிருக்காங்க
**********************************************
சார் கள்ள நோட்டை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறதுன்னு உங்களுக்கு தெரியுமா ?'
தெரியாதே !
'ரொம்ப நல்லதா போச்சு இந்த நூறு ருபாய்க்கு சேஞ்சு கொடுங்க !'
**********************************************
திரும்ப திரும்ப என் வீட்ல திருட்டு போகுது, சார்...
அப்ப திரும்பாம ஒரே பக்கமா இருந்துவிட வேண்டியதுதானே ?
**********************************************
கணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது
நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?
மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது
**********************************************
ஆசிரியர் : படிக்கற பசங்க ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கின போதும்
மாணவன் : அது எப்படி சார் முடியும். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தானே காலேஜ்
**********************************************
கன்ட்ரக்டர் : படியில நிக்காதப்பா...!பஸ் உள்ள தான் கடல் மாதிரி இடம் இருக்கே ...உள்ள வாப்பா...!
ஸ்டுடண்ட் : எனக்கு நீச்சல் தெரியாதுங்கோ...நான் கரையிலே நின்னுகிறேன்..
**********************************************
முதலாளி: இவ்வள்வு வேகமா காரை ஓட்டாதேப்பா,
எனக்கு பயமா இருக்கு.
டிரைவர்: பயப்படாதீர்கள், கார் வேகமாய்ப் போகும்போதெல்லாம்
என்னைப் போலவே நீங்களும் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள்
No comments:
Post a Comment