Tuesday, May 28, 2013

சிம்மம் ராசிகான குரு பெயர்ச்சி பலன்கள் 28.5.2013 முதல் 12.6.2014 வரை


28.05.2013தேதி இரவு, 9:18PM மணிக்கு, குரு பகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார்.

மனித வாழ்க்கையின் ஏற்றம்-இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை  அளிப்போர் நவகிரஹங்கள் எனப் போற்றப்பெறும் நவநாயகர்களே ஆவர். ஒன்பது கிரஹங்களில் ஐந்தாவதாக - நடு நாயகராகத் திகழ்பவர்  குருபகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரஹம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு.

இவ் ராசியில் பிறந்த அனைவருக்குமான பொதுப்பலன்களே இங்கு சொல்லப்பெற்றுள்ளன. அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை, பலம், பார்வை, திசா புத்தி போன்றவற்றை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இப் பலன்கள் மாறுபடலாம் என்பதை மனதிற் கொள்ளக.

அதனால்தான் ”குரு பார்க்க கோடி நன்மை” ”குரு பார்வை தோஷ நிவர்த்தி” என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப்பெறுகின்றது. குரு  பெயர்ச்சி என்பது குருபகவான் ராசி மண்டலத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றோர் ராசிக்குச் செல்லும் நிகழ்வாகும். இந்த குருப்பெயர்ச்சி என்பது  சுமாராக ஓர் ஆண்டிற்கு ஒருமுறை நிகழ்வது ஆகும். நவகிரகங்களில் பூரண சுபகிரகமான குருபகவான், ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும்  பன்னிரண்டு ராசிகளைச் சேர்ந்த அன்பர்களுக்கு ஏற்படக்கூடிய பலாபலன்களே கோசார பலன்கள் எனப்படும்.

பொதுவாக குருபகவான் ஒரு ராசிக்கு 2, 5, 7, 9, 11 போன்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது சுப பலன்களையும் 1, 3, 4, 5, 8, 10, 12 இடங்களில்  சஞ்சரிக்கும்போது அசுப பலன்களையும் வழங்குவார் என்பது விதி. ஆனால், இது பொதுவான விதிதான். அவரவருடைய சுய ஜாதகத்தில் அமைந்துள்ள  கிரக நிலைகளின்படியும், தசாபுத்திகளின் படியும் கோசார பலன்கள் மாறுபடும்.


சிம்மம்: மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

தொட்டதெல்லாம் துலங்கும்
கிழக்கும் மேற்கும் அலைந்தாலும் கிடைப்பது தான் கிடைக்கும் என்பதை அறிந்த நீங்கள், அளவுக்கு அதிகமாக ஆசைப்பட மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10ல் அமர்ந்திருந்த குருபகவான் உங்களை பல வகையிலும் பாடாய்ப் படுத்தினார். சொந்த பந்தங்களெல்லாம் பார்த்தும் பார்க்காமலும் சென்றார்களே! உங்களுக்கு வரவேண்டிய பணம் வராமல் போனதால் நீங்கள் வாங்கியிருந்த இடத்தில் திருப்பித் தர முடியாமல் திண்டாடினீர்களே! இதுநாள் வரை காப்பாற்றி வைத்திருந்த கௌரவத்தை இழக்க வேண்டி வந்ததே! குடும்பத்தில் உள்ளவர்களும் உங்களை புரிந்து கொள்ளாமல் போனார்களே! தலைக்குனிவையும், வீண் பழியையும் ஏற்படுத்திய குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்கள் ராசிக்கு லாப வீடான 11ம் வீட்டில் அமர்வதால் பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்ப்பதுபோல இனி எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும்.

திக்கு திசையறிந்து இருட்டிலிருந்து வெளியுலகத்திற்கு வருவீர்கள். இனி தொட்ட தெல்லாம் துலங்கும். சின்ன வேலையைக் கூட முடிக்க முடியாமல் தடுமாறினீர்களே! உங்கள் ராசிக்கு 7ம் வீட்டை குரு பார்ப்பதால் அழகு, இளமை கூடும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். கனிவான பேச்சால் விஐபிகள் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். உங்களின் 3ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வழக்கில் வெற்றி உண்டு. உங்களின் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். குரு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சொந்த பந்தங்கள் மெச்சும்படி மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:
28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் சுக, பாக்யாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தாயாருக்கு இருந்த மூட்டு வலி, முதுகு வலி நீங்கும். அவருடன் இருந்த மனஸ்தாபம் விலகும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் கட்டுவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். கடன் பிரச்னையை தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர் ஆதரவாக இருப்பார்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் பெரிய திட்டங்கள் நிறைவேறும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.

29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்கள் பூர்வ புண்ய, அஷ்டமாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். Thana143.blogspot.com சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உணவு விஷயத்தில் மருத்துவரின் ஆலோசனையை ஏற்பது நல்லது.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலகட்டத்தில் ஓய்வெடுக்க முடியாதபடி உழைக்க வேண்டி வரும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். காய்ச்சல், யூரினரி இன்பெக்ஷன் வந்து செல்லும். ஆனால், பணப்புழக்கம் அதிகரிக்கும்.

செல்வாக்கு கூடும். யாருக்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் இதுவரை முடங்கிக் கிடந்தீர்களே! பாக்கிகள் வசூலாகாமல் தவித்தீர்களே! வேலையாட்களாலும், பங்குதாரர்களாலும் பிரச்னைகள் இருந்ததே! இனி எல்லாம் மாறும். வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். லாபம் இரட்டிப்பாகும். புதிதாக முதலீடு செய்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள்.

வேலையாட்கள் உங்கள் மனநிலையை புரிந்துகொண்டு உங்கள் வேலைச்சுமையை குறைப்பார்கள். வியாபார சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் அமர்வீர்கள். கடையை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றுவீர்கள். Thana143.blogspot.com பழைய பாக்கிகள் வேகமாக வசூலாகும். பங்குதாரர்களால் இருந்த பிரச்னைகள் ஓயும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். கம்யூனிகேஷன், புத்தகம், ஷேர், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் லாபம் பெருகும்.

உத்யோகத்தில் பலவிதங்களிலும் அசிங்கப்பட்டீர்களே! தகுதியற்றவர்களிடமெல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருந்ததே! அலுவலகத்தில் இனி மதிக்கப்படுவீர்கள். மூத்த அதிகாரிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். உங்களை புரிந்து கொள்ளும் புது அதிகாரி வந்து சேருவார்.

உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும், சலுகைகளும் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். Thana143.blogspot.com கன்னிப் பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். அழகு, ஆரோக்யம் கூடும். தோழிகளுக்கெல்லாம் திருமணம் முடிந்து விட்டதே நமக்கில்லையே என்று கலங்காதீர்கள். தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக முடியும்.

வேலை கிடைக்கும். மாணவ மாணவிகளே! இனி நினைவாற்றல் கூடும். வகுப்பறையில் ஆசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். ஸ்பெஷல் கோச்சிங் கிளாஸ் சென்று வருவீர்கள். நுழைவுத் தேர்விலும் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினரே! புதிதாக யோசிப்பீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். கிசுகிசுத் தொல்லைகள் நீங்கும். சம்பளபாக்கி கைக்கு வரும். அரசு கௌரவிக்கும். மூத்த கலைஞர்கள் உங்களுக்காக பரிந்து பேசுவார்கள்.

வசதி, வாய்ப்புகள் பெருகும். அரசியல்வாதிகளே! செல்வாக்குக் கூடும். புதுப் பொறுப்புகளை ஏற்பீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும். Thana143.blogspot.com சகாக்கள் மத்தியில் ஆதரவு கூடும். தேர்தலில் வெற்றி உண்டு. விவசாயிகளே! அடகிலிருந்த பத்திரத்தை மீட்பீர்கள். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். விளைச்சல் அதிகரிப்பதால் சந்தோஷமடைவீர்கள். அரசாங்கச் சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள்.   

இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன் அடுத்தடுத்து வெற்றிகளையும் பணப்புழக்கத்தையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்
திருவள்ளூர், அரக்கோணத்திற்கு அருகேயுள்ள தக்கோலம் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

No comments:

Post a Comment