Tuesday, July 10, 2012

FaceBookல் சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் Offline-இல் இருப்பதாக காண்பிப்பது எப்படி?

பேஸ்புக் அடிக்கடி பல மாற்றங்களை செய்து வருவது நாம் அறிந்ததே. ஆனால் நிறைய மாற்றங்களை வாசர்களுக்கு தெரிவிப்பது இல்லை. அதில் சமீபத்திய ஒரு மாற்றம் தான் சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் Offline-இல் இருப்பதாக காண்பிப்பது.


இதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் உள்ளபோது உங்களுக்கு யாரேனும் அடிக்கடி சாட்டில் வந்து தொல்லை தந்தால் அந்த குறிப்பிட்ட நபருக்கு மட்டும் நீங்கள் Offline-இல் இருப்பதாக காட்ட முடியும். ஆனால் மற்றவர்களுக்கு நீங்கள் ஆன்லைனில் இருப்பீர்கள்.

குறிப்பாக பெண்களுக்கு , அதிக நண்பர்கள் உள்ளவர்களுக்கும் இது பயன்படும்.


முதலில் குறிப்பிட்ட நபரின் பெயர் மீது கிளிக் செய்யவும். இதற்கு அவர் ஆன்லைனில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் பெயர் லிஸ்ட்டில் இல்லை என்றால் Search-இல் பெயரை கொடுத்து தேடவும்.  இப்போது Chat Box ஓபன் ஆகி இருக்கும்.

இப்போது மேலே படத்தில் உள்ளது சிறிய Settings icon மீது கிளிக் செய்து வரும் மெனுவில் "Go Offine to Mister X" என்பதை கிளிக் செய்து விடுங்கள். இனிமேல் அவருக்கு நீங்கள் எப்போதும் Offline -இல் இருப்பதாகவே தெரியும்.

இதை மாற்ற மறுபடியும் இதே பகுதியில் வந்து Go Online என்று கொடுத்து அவருக்கு நீங்கள் ஆன்லைன் வந்து விடலாம்.




1 comment:

  1. இப்படி பன்னி வைச்சா நாம் போண்ல சட் பன்னினாலும் சம்மந்த பட்டவங்களுக்கு சட் ஒண்ல காட்டாது

    ReplyDelete