Wednesday, August 24, 2011

Phone Tamil Reading (மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை)


1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/  இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
 
2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு (address Bar) அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.

3. தோன்றும் அப்பக்கத்தின் இறுதியில்/அடியில் உள்ள Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.

4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.


முயற்சி செய்து பாருங்கள்........... 
 


இன்னும் உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை பார்க்க முடியவில்லையாயின் ஒபேரா உலாவியின் செட்டிங் பகுதியில் பின்வரும் மாற்றங்களை செய்யவும்.

ஒபேரா உலாவியின் (settings)அமைப்புகள் பகுதிக்கு சென்று ("Font Size")எழுத்துரு அளவை பெரியது(Large) ஆகவும், (Mobile view) ஐ "ON" ம் செய்து சேமித்துக் கொள்ளுங்கள்

இறுதியாக ஒபேரா உலாவியை மீள தொடக்குங்கள் (Restart)

No comments:

Post a Comment